vanakkam

புலம்பெயர்ந்து வாழும் சைவத் தமிழ் மக்களிடையேயும், இளம்சிறார்களிடையேயும், சைவ சமய திருநெறிய தமிழ்- திருமுறை வழிபாடு, சைவசமய அறிவு, சைவ ஆசார, கலாச்சார ஒழுக்க நெறிகள் போன்ற விழுமியங்கள்; சைவசமய கலாச்சார விழாக்கள் என்பன தழைத்தோங்கத்தொண்டாற்ற வேண்டுமென்ற பெரும் விருப்பத்தில் கனடா சைவசித்தாந்தமன்றம் டிசம்பர் 01, 1995இல் உருவாக்கப் பெற்றது.

சைவசமய அறிவை இளம் தலைமுறையினரிடையே வளர்ப்பதற்காக சைவசமய குரவர்பாடசாலையும் டிசம்பர் 15, 1995 இல் கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் உருவாக்கப்பெற்று. சைவசமயக் கல்வி கற்பிக்கப் பெற்று வருகின்றது. இம் மன்றத்தின் செய்திகள்யாவும் ஆரம்பத்தில் 1996 மார்ச் மாதத்திலிருந்து யூலை 1996 வரை சிறு செய்தி இதழாகவெளிவந்து கொண்டிருந்தது. பின்பு பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1996ஆகஸ்ட் மாத்திலிருந்து அன்புநெறி என்ற பெயருடன் திங்கள் இதழாக வெளிவரத்தொடங்கி மாதந்தோறும் வந்து கொண்டிருக்கிறது.

சைவசித்தாந்தமன்றம் தொடங்கிய நாளிலிருந்து வருடா வருடம் ஒழுங்காகச் செய்துவரும் மன்றத்தின் முக்கியமான சிலபணிகள்:

  • சைவசமய கூட்டு வழிபாடு.
  • சைவசமய குரவர் பாடசாலை வகுப்புகள்
  • அன்புநெறி சஞ்சிகை என்ற திங்கள் இதழை மாதந்தோறும் ஒழுங்காக வெளியிட்டு வருதல்
  • நாயன்மார்கள், அருளாளர்கள் குருபூசைகள், சைவப்பெரியார்கள் நினைவு வழிபாடுகள்
  • டிசம்பர் (மார்கழி) மாதத்தில் திருவாசக விழா
  • திருவாசக முற்றோதல்
  • ஆகஸ்ட் மாதத்தில் திருவருட்செல்வர் விழா
  • ஒவ்வோராண்டும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் கொழும்பு விவேகானந்தா சபைநடத்தும் சைவசமயம் பாடப் பரீட்சைக்கு மன்ற மாணவர் தோற்ற விடுதல்
  • ஒவ்வோராண்டும் ஐப்பசி கார்த்திகை மாதத்தில் நடைபெறும் சைவ பரிபாலனசபை சைவநெறித்தேர்வு தமிழ் மொழித்தேர்வு என்பனவற்றுக்கு தோற்ற விடுதல். 
  • சிவராத்திரி வழிபாடு, நவராத்திரி, கலைமகள் வழிபாடு என்பன நடத்தி வருதல்
  • தைப்பொங்கல், சித்திரை புதுவருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, தீபாவளி, போன்றபண்டிகைகள் பற்றிய விளக்கம் கொடுத்து வழிபாடு நடத்துதல்
  • சமூகப் பணிகள்

இவற்றைவிடச் சிறப்பு நிகழ்ச்சிகளாக பல்வேறு நிகழ்ச்சிகள் காலத்திற்குக் காலம் நடைபெறுகின்றன.